நேற்று நடந்த லீக் போட்டியில் இந்திய அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல், மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் களமிறங்க முடிவு தேர்வு செய்தது.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 224 ரன்கள் குவித்து 8 விக்கெட்களை இழந்தது. இதில் விராட் கோலி 67 ரன்களும் கேதர் ஜாதவ் 52 ரன்களுக்கு குவித்தனர். இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 213 ரன்கள் மட்டும் பெற்று தோல்வி அடைந்தனர்.

நேற்றைய போட்டியில் பேட்டிங்கில் இரு அணியும் சொதப்பி இருந்தாலும் பவுலிங்கில் சிறப்பாக விளையாடினர். அதில் குறிப்பாக முகமது ஷமிஆப்கானிஸ்தான் எதிராக 50வது ஓவரில் தொடர்ந்து மூன்று விக்கெட்கள் பெற்றார். இவர் மட்டும் மொத்தம் 4 விக்கெட்களை பெற்றார்.

போட்டி முடிவந்த பிறகு ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முகமது ஷமி ‘ எனது இந்த மூன்று விக்கெட்களுக்கு தோனி தான் காரணம். தோனி அந்த மூன்று பந்துகளுக்கு முன்னாள் யார்க்கரை வீசும்மாறு அறியுரை கூறினார் ‘. என்று அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here