சீனாவில் தற்போது நடைபெற்று வரும் ஷாங்காய் ஓபன் டென்னிஸ் தொடரில் பிரபல சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் மற்றும் ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஷிவ்ரேவ் இருவரும் மோதிக்கொண்டனர்.

துவக்கத்தில் சற்று தடுமாறிய ரோஜர் ஃபெடரர் முதல் செட்டை 3-6 என பறிகொடுத்தார். இந்நிலையில் இரண்டாவது சட்டை சற்று போராடி 7-6 என வென்றார்.

சுதாரித்துக்கொண்ட ஜெர்மன் வீரர் ஷிவரேவ் மூன்றாவது செட்டை 6-3 என கைப்பற்றி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

நட்சத்திர வீரர் பெடரர் காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியது, ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here