கரீபியன் ப்ரீமியர் லீக்;  கேப்டனாகிறார் சோயிப் மாலிக்

கரீபியன் ப்ரீமியர் லீக் தொடருக்கான கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் கேப்டனாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் சோயிப் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் ரசிகர்களின் மிகப்பெரும் வரவேற்பு பெற்றததை தொடர்ந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் தங்களது நாடுகளில் இதே போன்ற உள்ளூர் டி.20 தொடர்களை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் மேற்கிந்திய தீவிலும் கரீபியன் ப்ரீமியர் லீக் என்ற பெயர் உள்ளூர் டி.20 தொடர் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் கேப்டனாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான சோயிப் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆல் ரவுண்டரான சோயிப் மாலிக் இதற்கு முன் வெளிநாட்டில் நடைபெறும் லீக்கில் வங்காளதேச பிரீமியர் லீக் தொடரில் கமிலா விக்டோரியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு  இவர் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த தொடர் அடுத்த மாதம் 8ம் தேதி துவங்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here