தனது கிரிக்கெட் வாழ்க்கை இளம் வயதிலேயே பல அனுபவங்கள் பெற்று வருவதாகவும் இளம் வீரர் சுப்மன் கில் பேட்டியளித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக நினைக்கிறேன். அனைத்து தொடர்களிலும் என்னுடைய ஆட்டத்தில் வேகம் காட்டி, கடின உழைப்பின் மூலம் ரன்கள் அடிக்க முயற்சி செய்கிறேன்.
டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ரிசர்வ் வீரராக இருப்பதால் நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. உலகின் சிறந்த அணியிடம் இருந்து கற்றுக் கொண்டு வருகிறேன். இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை. இதனால் எனக்கு சிறந்த பாடமாக அமைந்தது.
தொடக்க வீரராக களம் இறங்கும் ரோகித் சர்மாவின் பேட்டிங் டெக்னிக் உண்மையிலேயே மாறவில்லை. அவர் எப்படி ரன்கள் குவிக்கிறார் என்பது எல்லாம் மனநிலையில் கவனம் செலுத்துவதை பொறுத்துதான் அமைகிறது என்றார்.