இந்திய பெண்கள் அணியின் துவக்க வீரர்கள் ஸ்மிருதி மந்தனா மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அதிரடியாக ஆடி 63 பந்துகளில் 74 ரன்கள் குவித்து, தொடரை கைப்பற்ற உதவினார்.

இதன்மூலம் ஒருநாள் அரங்கில் 2 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இந்திய வீரர்களின் மத்தியில் அதிவேக 2 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்களில் 2வது இடத்தில் இருக்கிறார். இவர் 51 இன்னிங்ஸ்களில் இதனை பூர்த்தி செய்துள்ளார்.

இவருக்கு முன்னர் 48 இன்னிங்ஸ்களில் ஷிகர் தவான் 2 ஆயிரம் ரன்களை கடந்தது அதிவிரைவாக உள்ளது. இந்திய வீராங்கனைகள் மத்தியில் இதுவே அதிவிரைவான 2000 ரன்கள் ஆகும்.

சர்வதேச வீராங்கனைகள் மத்தியில் இது மூன்றாவது அதிவேக 2000 ரன்கள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here