ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் தற்பொழுது நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட்  போட்டி முடிவடைந்த நிலையில், இரண்டாம் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 258 ரன்கள் எடுத்தது. தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அணைத்து விக்கெட்களையும் இழந்து, 250 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Image result for ஆஷஸ் போட்டி

முதல் இன்னிங்ஸ்ஸில் 92 ரன்கள் எடுத்து ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழந்தார். ஸ்மித் 70 ரன்கள் எடுத்திருந்த போது, இங்கிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளர் ஆர்ச்சர் வீசிய பந்தை எதிர்கொள்ள முடியாமல் தனது கையில் அடிவாங்கி தடுமாறினார்.

பிறகு  80 ரன்கள் எடுத்த போது, ஆர்ச்சர் வீசிய பந்து ஸ்டீவன் சுமித் கழுத்தை பதம் பார்த்தது. 140 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பந்து ஸ்மித்தின் கழுத்தில் அடித்தது. இதனால் நிலை தடுமாறிய ஸ்மித், மைதானத்தில் சுருண்டு கீலே விழுந்தார்.

Image result for smith injury

 

இந்நிலையில் காயம் காரணமாக ஸ்டீவன் ஸ்மித்திற்குப் பதிலாக மாற்று வீரராக மார்னஸ் லபுஸ்சேக்னே களம் இறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here