தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடிய இந்திய அணிக்கு மயங்க் அகர்வால் 108, புஜாரா 58, ரஹானே 59, ஜடேஜா 91 ரன்கள் எடுத்து நல்ல ஸ்கோரை எட்ட உதவினர். மறுமுனையில், கேப்டன் கோலி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெஸ்ட் அரங்கில் தனது அதிகபட்ச ஸ்கோரை எட்டினார். இவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 254 ரன்கள் எடுத்தார்.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த தென்னாபிரிக்கா அணிக்கு துவக்க வீரர் மார்க்ரம் ரன் எடுக்காமல் வெளியேறி ஏமாற்றினார். மற்றொரு துவக்க வீரர் டீன் எல்கர் (6) மற்றும் பவுமா (8) இருவரும் சொற்ப ரன்களில் வெளியேற தென்னாபிரிக்கா அணி ஆட்டம் கண்டது.

இறுதியாக இரண்டாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணி 565 ரன்கள் முன்னிலையில் வலுவான நிலையில் இருக்கிறது. இந்தியாவிற்கு உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், முகமது சமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here