தென் ஆப்ரிக்காவில் பாகிஸ்தான் பெண்கள் அணியும், தென்ஆப்ரிக்கா பெண்கள் அணியும்  5 டி20 போட்டிகளில் விளையாடி வந்தனர்.

கடந்த 23-ம் தேதி கடைசி டி20 போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா பெண்கள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 125 ரன்கள் சேர்த்தனர்.பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக  நிதா டார்  28 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் களமிறங்கிய தென்ஆப்ரிக்கா அணி 15.1 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.தென்ஆப்ரிக்கா அணியில் அதிகபட்சமாக லிஸ்லீ லீ 75 ரன்னும், நாடின் டி க்லெர்க் 37 ரன்னும் எடுத்து அட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த தொடரில் நடந்த 5 போட்டிகளில் தென்ஆப்ரிக்கா அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று டி20 தொடரை கைப்பற்றியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here