2019 உலக்ககோப்பையின் 45வது லீக் போடியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது. இந்த போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிஙை தேர்வு செய்தனர்.

தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 325 ரன்கள் குவித்தனர். இதில் டு பிளெசிஸ் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்டுத்தி சதம் விளாசினார். ஆனால் வான் டெர் டுசென் 5 ரன்களில் சதத்தை தவறவிட்டார். இவர் 95 ரன்கள் குவித்து பாட் கம்மின்ஸ் பந்தில் விக்கெட் இழந்தார்.

இதன் பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் தொடக்கத்திலிருந்து சிறப்பாக விளையாடி 122 ரன்கள் குவித்தார். இதன் பின் களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். நடுவரிசையில் களமிறங்கிய அலெக்ஸ் கேரி 85 ரன்கள் குவித்தார்.

இருப்பினும் ஆஸ்திரேலியா 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 315 ரன்கள் மட்டும் குவித்து தோல்வியை அடைந்தனர். தென்னாப்பிரிக்கா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தனர். ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர் ரபாடா 3 விக்கெட்களை பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here