உலகக் கோப்பை போட்டியில் 27வது லீக் போட்டியில், இங்கிலாந்து அணியும் இலங்கை அணியும் லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிஙை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தால் இலங்கை அணி இங்கிலாந்து அணியிடம் திணறியது. இதன் பின் களமிறங்கிய ஃபெர்னாடோ, குசல் மெண்டிஸ் மற்றும் மேத்யூஸ் சிறப்பாக விளையாடியதால் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழந்து 232 ரன்கள் எடுத்தனர்.

இதன் பின் களமிறங்கிய இங்கிலாந்து தொடக்க வீரர்கள் தனது விக்கெட்களை ஆரம்பித்திலே இழந்தனர். இதன் களமிறங்கிய ரூட் மற்றும் மோர்கன் ஓரளவு சிறப்பாக விளையாடி வந்தனர். ஆனால் ரூட் 57 மற்றும் மோர்கன் 21 ரன்களிலே வெளியேறினர்.

இதன் பின் ஸ்டோக்ஸ் களமிறங்கினார். இவருக்கு பாட்னராக எவரும் ஜோடி சேராமல் களமிறங்கிய சிறிது நேரத்தில் தனது விக்கெட்களை இழந்தனர். இதனால் ஸ்டோக்ஸ் தனியாக ரன்களை குவித்து வந்தார். ஆனால் மற்ற வீரர்கள் இவருடன் சேர்ந்து சிறிது நேரம் தனது விக்கெட்களை இழக்காமல் இருந்திருந்தால் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருத்திருக்கும்.

இறுதியாக இங்கிலாந்து அணி 47 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 212 ரன்கள் குவித்தனர். இதில் ஸ்டோக்ஸ் மட்டும் 82 ரன்கள் குவித்து விக்கெட் இழக்காமல் இருந்தார். இலங்கை அணி 20 வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

ஆனால் இன்றைய ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் தனது கடைமையை சிறப்பாக வெளிப்படுத்தினர். குறிப்பாக மலிங்கா 4 விக்கெட்கள், தன்ஞசய டி சில்வா, ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் மார்க் வுட் 3 விக்கெட்கள், அதில் ரஷித் மற்றும் இசுரு உதான 2 விக்கெட்களை பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here