2019 உலகக்கோப்பை தொடரின் 35வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இந்த போட்டி செஸ்டர் லீ ஸ்ட்ரீட் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கியது இலங்கை அணி. ஆட்டத்தின் முதல் பந்திலே இலங்கை அணி கேப்டன் திமுத் கருணாரத் விக்கெட் இழந்தார். இதன் பின் குசல் பெரேரா மற்றும் ஃபெர்னாடோ களமிறங்கி தலா 30 ரன்கள் குவித்து விக்கெட் இழந்தனர்.

இதன் பின் களமிறங்கிய அனைவரும் குறைவான ரன்னிலே விக்கெட்களை தொடர்ச்சியாக இழந்தனர். குசல் மெண்டிஸ் (23), ஏஞ்சலோ மேத்யூஸ் (11), தனஞ்சய டி சில்வா (24), திசாரா பெரேரா (21), ஜீவன் மெண்டிஸ் ( 18), இசுரு உதனா (17), லசித் மலிங்கா(4), சுரங்க லக்மல் (5) ரன்கள் குவித்து வெளியேறினர். 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 203 ரன்கள் குவித்தனர்.

தென்னாப்பிரிக்கா அணியில் கறிஸ் மோரிஸ் மற்றும் டுவைன் பிரிட்டோரியஸ் சிறப்பாக செயல்பட்டு தலா 3 விக்கெட்களைை பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here