2019 ஐ.சி.சி உலகக் கோப்பை போட்டியில் 27வது லீக் போட்டியில், இங்கிலாந்து அணியும் இலங்கை அணியும் லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி மதியம் 3மணி அளவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிஙை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் திமுத் கருணாரத் 1 ரன்னிலும் குசல் பெரேரா 2 ரன்னிலும் தனது விக்கெட்களை இழந்தனர். இது இலங்கை அணிக்கு பெரும் இழப்பாக இருந்தது. இதன் பின் களமிறங்கிய ஃபெர்னாடோ மற்றும் குசல் மெண்டிஸ் பாட்னர்சிபில் ரன்களை குவிக்க ஆர்ம்பித்தனர். குசல் மெண்டிஸ் 46 மற்றும் ஃபெர்னாடோ 49 ரன்களை அடித்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தனர். இதன் பின் மேத்யூஸ் 85 ரன்களை குவித்து சதம் வாய்ப்பை இழந்தார். 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்களை இழந்து 232 ரன்களை குவித்துள்னர்.

பந்து வீச்சில் சிறப்பாக விளையாடிய ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் மார்க் வுட் 3 விக்கெட்களை பெற்றனர்.