உலக கோப்பை போட்டி வருகின்ற 30-ம்தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் நேற்று பயிற்சி போட்டி தொடங்கியது.நேற்றைய போட்டியில் சவுத் ஆப்பிரிக்கா அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் இங்கிலாந்து Vs  ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றனர்.இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

ஆட்டம் தொடக்கத்தில் பிஞ்ச் 14 ரன்னில் அவுட் ஆனார். ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 297 ரன்கள் எடுத்தனர்.ஆஸ்திரேலியா அணியில் ஸ்டீவன் ஸ்மித் 116 ரன்களும்,டேவிட் வார்னர் 43 ரன்களுடன் விக்கெட்டை பறி கொடுத்தனர்.

இங்கிலாந்து அணியில் லியாம் பிளன்கெட் 4 விக்கெட்டை வீழ்த்தினார்.இங்கிலாந்து அணி 298 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here