மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையில் 1971-ம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி நடந்தது.

ஒரு நாள் போட்டி அறிமுகம் செய்த 4 ஆண்டுகளுக்கு பிறகு முதல் உலக கோப்பை போட்டி 1975-ம் ஆண்டு (ஜூன் 7-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை) நடத்தப்பட்டது. இப்போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது.

இந்த உலக கோப்பை போட்டியில் 8 அணிகள் கலந்து கொண்டனர்.அதில் இங்கிலாந்து, கிழக்கு ஆப்பிரிக்கா,நியூசிலாந்து, இந்தியா, அணிகள் ‘ஏ’ பிரிவிலும், வெஸ்ட்இண்டீஸ்,  இலங்கை அணிகள்,ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவிலும் இடம் பெற்றன.

இந்த உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்திற்கு எதிரான லீக் தொடர் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான சுனில் கவாஸ்கர் விளையாடிய ஆட்டத்தை ஆமை வேக ஆட்டம் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

அந்த லீக் தொடரில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 60 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் குவித்தது.பின்னர் களமிறங்கிய இந்திய அணி 60 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்து. 202 ரன்கள் வித்தியாசத்தில் மிக  மோசமான தோல்வியை தழுவியது.

இப்போட்டியில் சுனில் கவாஸ்கர் 174 பந்தில்  ஒரு பவுண்டரியுடன் 36 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார்.ஆட்டம் முடிந்து வெளியே வந்த கவாஸ்கரிடம் ஏன் வெற்றிக்காக போராடவில்லை பல ரசிகர்கள் தகராறு செய்தனர்.

இந்நிலையில் இந்திய அணி முதல் உலக கோப்பைக்கு முன்பு குறைந்த ஒரு நாள் போட்டியில் விளையாடி இருந்ததால் இந்திய அணி வீரர்களின் ஆட்டம் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது போன்று தெரிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here