சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தமிழ்நாடு – கேரளா அணிகள் மோதின.

கேரளா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த தமிழக அணிக்கு தொடக்க வீரர்களாக முரளி விஜய், ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினர். ஜெகதீசன் 8 ரன்னிலும், முரளி விஜய் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த அபரஜித் 35 ரன்கள், தினேஷ் கார்த்திக் 33 ரன்கள், விஜய் சங்கர் 25 ரன்கள், ஷாருக்கான் 28 ரன்கள், முகமது 34 ரன்கள் அடிக்க தமிழ்நாடு 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது.

அடுத்ததாக களமிறங்கிய 175 கேரளா அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் தமிழ்நாடு 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழக அணிக்கு டி. நடராஜன், பெரியசாமி இருவரும் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here