7-வது ப்ரோ கபடி சீசன் 128வது போட்டியில் பெங்களூரு புல்ஸ் மற்றும் தமிழ்தலைவாஸ் இரு அணிகளும் பலப்பரீட்சை மேற்கொள்ள இருக்கின்றன.

நொய்டாவில் உள்ள மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்டது பெங்களூரு புல்ஸ் அணி. ஆனால், மிகவும் மோசமான நிலையில் இருக்கும் தமிழ் தலைவாஸ் அணி பிளே ஆப் வாய்ப்பை நழுவ விட்டது. பெயரளவில் இன்றைய போட்டி நடைபெற்றாலும் ஆறுதல் வெற்றியை பெற தமிழ் தலைவாஸ் அணி முழு முயற்சியுடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இதற்கு முன்னர் இரு அணிகளும் மோதிக் கொண்டதில், பெங்களூரு அணி 6 முறையும், தமிழ் தலைவாஸ் ஒரே முறை மட்டுமே வென்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here