தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமான போதும் டென்னிஸ் விட்டு விலகி இருக்க முடியவில்லை என பதிவிட்டு, டென்னிஸ் ஆடும் விடியோவை வெளியிட்டு வைரலாகியுள்ளார் சானியா மிர்சா.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, இந்தியாவிற்க்கு பல பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளார். இவர் பெண்கள் இரட்டையர் பிரிவில் ஆஸி., ஓபன் (2016), விம்பிள்டன் (2015), யூ.எஸ்., ஓபன் (2015) சாம்பியன் பட்டமும், கலப்பு இரட்டையர் பிரிவில் ஆஸி., ஓபன் (2009), பிரஞ்சு ஓபன் (2012), யூ.எஸ்., ஓபன் (2014) சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.

தற்பொழுது 7 மாதம் கர்ப்பமாக இருக்கும் சானியா மிர்சா தனது ட்விட்டர் பக்கத்தில் என்னால் இந்த நிலையிலும் டென்னிஸ் விட்டு சற்று விலகி இருக்க முடியவில்லை என தெரிவித்து தான் ஆடும் வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here