உலக கோப்பை போட்டி இன்னும் சில நாள்களில் நடைபெற உள்ளது.நேற்றைய பயிற்சி போட்டியில் இங்கிலாந்து,ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றனர்.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

ஆட்டம் தொடக்கத்தில் பிஞ்ச் 14 ரன்னில் அவுட் ஆனார். ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 297 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணியில் ஸ்டீவன் ஸ்மித் 116 ரன்களும்,டேவிட் வார்னர் 43 ரன்களுடன் விக்கெட்டை பறி கொடுத்தனர்.இங்கிலாந்து அணியில் லியாம் பிளன்கெட் 4 விக்கெட்டை வீழ்த்தினார்.

298 ரன்கள் இலக்குடன் களமிறங்கி இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய், ஜானி பைர்ஸ்டோவ் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய ஜேசன் ராய் 32 ரன்னிலும்,ஜானி பைர்ஸ்டோவ் 12 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.பின்னர் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 20 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.

இங்கிலாந்து அணி இறுதியாக 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 285 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணியிடம் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here