இத்தாலியின்  புகழ் பெற்ற இத்தாலி கால்பந்து கோப்பை1922-ம்ஆண்டு முதல் நடை பெறுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் ரோமில் நடந்த இறுதி போட்டியில் லட்ஸ்ஜோ அணியும்-அட்லாண்டா அணியும் மோதியது.

இப்போட்டியில்  லட்ஸ்ஜோஅணி 2-0 என்ற கோல்  கணக்கில் வெற்றி பெற்றது.மேலும் லட்ஸ்ஜோ அணி 7 முறையாக கோப்பையை கைப்பற்றியது.போட்டி துவங்குவதற்கு முன் காரில் கத்தி, பட்டாசு போன்ற பொருள்கள் வைத்திருந்தகாக லட்ஸ்ஜோ அணி ரசிகர்கள் 2 பேரை போலீஸ் கைது செய்தனர்.

இந்நிலையில் லட்ஸ்ஜோ அணி ரசிகர்கள் போலீஸ் அதிகாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போலீசுக்கும்-ரசிகர்களுக்கும் இடையே மோதலாக மாறியது. ரசிகர்கள் கல்,பாட்டில் போன்ற பொருள்களை போலீஸ் மீது வீசினர்.

இதனால் போலீஸ் பதிலுக்கு தடியடி நடத்தியது. இதில் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் போலீஸ் காருக்கு தீ வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here