ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் கிரிக்கெட் வீரர் பிரெண்டன் டெய்லர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஜிம்பாப்வே அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ் மேனான பிரெண்டன் டெய்லர் 188ஒருநாள் போட்டிகளிலும், 28 டெஸ்ட் போட்டி களிலும் விளையாடி உள்ளார்.

இவர் மனைவியிடம் கத்தி முனையில் கொள்ளை அடித்து விட்டதாக ட்விட்டரில் ஒரு பதிவு பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் “என் மனைவிக்காக வீட்டுக்கு வெளியே காத்துகொண்டு இருந்தேன். அப்போது என் மனைவின் அலறல் சத்தம் கேட்டது என்ன என ஓடி போய் பார்ப்பதற்குள் அங்கு ஆயுதம் வைத்து இருந்த நான்கு பேர் என் மனைவிடம் இருந்து கைப்பையை கொள்ளையடித்து விட்டு சிகப்பு காரில் சென்றுவிட்டனர்.

நல்ல வேலையாக என்மனைவிடம்இருந்த கைப்பையை மட்டுமேஇழந்தார். பொது மக்கள் விழிப்புடன் இருங்கள் மேலும்இருட்டில் செல்லும்போது கவனமாக இருங்கள் ” என கூறி இருந்தார்.

ஹராரேவில் அடிக்கடி மின்சாரம் நிற்பதால் கொள்ளையர்கள் கொள்ளையடிப்பது அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here