தாய்லாந்தில் கிங் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இந்த கால்பந்து போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் (இங்கிலாந்து) கடந்த ஜனவரி மாதத்தில் நடந்த ஆசிய கோப்பை கால்பந்து போட்டியுடன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர் இந்திய அணிக்கு புதிய  பயிற்சியாளராக குரோஷியா நாட்டை சார்ந்த இகோர் ஸ்டிமாக் என்பவரை கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஜூன் 5 முதல் 8 தேதி வரை கிங் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ளது.

பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் 37 பேர் கொண்ட உத்தேச பட்டியலை இகோர் ஸ்டிமாக் நேற்று வெளியிட்டார்.அந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த தனபால் கணேஷ், நந்தகுமார்சேகர், மிக்கோல் சூசைராஜ் ஆகிய மூன்று வீரர்கள் இடம்பெற்று உள்ளனர்.பயிற்சி முகாம் டெல்லியில் வருகின்ற 20-ந்தேதி தொடங்கவுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here