இன்று நடைபெறும் இரண்டாவது உலகக்கோப்பை போட்டியில் நியூஸிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட்களை இழந்து 243 ரன்கள் குவித்தனர். இதில் உஸ்மான் கவாஜா 88 ரன்களும் அலெக்ஸ் கேரி 71 ரன்களும் குவித்துள்ளனர். இந்த போட்டியின் 49வது ஓவரை வீசிய ட்ரெண்ட் போல்ட் ஹாட்ரிக் விக்கெட்களை பறித்தார்.

49.3 பந்தில் – உஸ்மன் கவாஜா போல்ட்டு அவுட்டானார்.

49.4 பந்தில் – ஸ்டார்க் போல்ட்டு அவுட்டானார்.

49.5 பந்தில் – பெஹ்ரெண்டோர்ஃப் எல்.பி.டப்யூ ஆனார்.

இறுதியாக ட்ரெண்ட் போல்ட் தனது 10 ஓவரில் 51 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here