அயர்லாந்து , நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய மூன்று அணிகளுக்கும்  இடையில் முத்தரப்பு தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.நேற்று மூன்றாவது   போட்டியில் அயர்லாந்து , ஸ்காட்லாந்து அணிகள் மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து உள்ளது.

தொடக்க வீரர்களாக ஜார்ஜ் முன்சி, கைல் கோட்ஸர் இருவரும் களமிறங்கினர். கைல் கோட்ஸர் 10 ரன்களில் வெளியேறினார்.பின்னர் இறங்கிய மேக்லியோட் உடன் ஜார்ஜ் முன்சி கைகோர்த்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

நிதானமாக விளையாடிய ஜார்ஜ் முன்சி 34 அவுட் ஆனார்.அதிரடியாக விளையாடிய மேக்லியோட் 42 பந்தில் 72 ரன்கள் குவித்தார்.இறுதியாக ஸ்காட்லாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 193 ரன்கள் எடுத்தனர்.

பின்னர் இறங்கிய அயர்லாந்து அணி கெவின், கரேத் டெலானி இருவரும் தொடக்க வீரர்களாக இறங்கினர். கரேத் டெலானி சிறப்பான ஆட்டத்தால் 28 பந்தில் 52 ரன் எடுத்தார். அடுத்து வந்த ஆண்ட்ரூ 64 ரன்கள் அடித்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார்.

பின்னர் இறங்கிய அனைத்து வீரர்களும் நிலைத்து நிற்கவில்லை. இதனால் 17.4 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 194 ரன்கள் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here