59 ஆவது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தய பிரிவில் பங்கேற்ற பிரபல தடகள வீராங்கனை டூட்டி சந்த், இறுதி சுற்றுக்கு முன்னேறி பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல் இறுதிச்சுற்றில் தங்கப்பதக்கம் வென்றார். இறுதிச்சுற்றில் இதற்கு முன்னர் இவர் படைத்த 11.26 விநாடிகள் என்ற சாதனையை தற்போது முறியடித்து, 11.22 வினாடிகளில் இலக்கை கடந்து தேசிய அளவில் புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்த ஆண்டு உலக பல்கலைக்கழகம் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் தங்கம் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here