இத்தாலியில் உள்ள ரோம் நகரில் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 5-7, 5-7 என்ற நேர்செட்டில் இத்தாலி வீரர் பெர்ட்டினியிடம் தோல்வி அடைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் கச்சனோவ் 5-7, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் பாவ்டிஸ்டா அகுட்டை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ்ஆகிய இருவரும் மோத இருந்தனர்.ஆனால் செரீனா வில்லியம்ஸ் இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் போட்டியில் இருந்து விலகினார். இதனால் வீனஸ் வில்லியம்ஸ் 2-வது சுற்று ஆட்டத்தில் விளையாடாமல் 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லிக் பார்டி 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் விக்டோரியா குஸ்மோவாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here