இந்திய டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கேப்டன் பொறுப்பேற்று 50 போட்டிகள் நிறைவடைந்துவிட்டன. இதில் 30 போட்டிகளை விராட் கோலி வென்றிருக்கிறார்.

முதல் 50 போட்டிகளில் கேப்டனாக இருந்து அதிக வெற்றிகளை பெற்றவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார்.

இன்றைய போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா, விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து பெற்ற 8வது இன்னிங்ஸ் வெற்றி ஆகும்.

இதன் மூலம் முன்னாள் கேப்டன் அசாருதீன் சாதனையை சமன் செய்திருக்கிறார். மேலும் இவருக்கு முந்தைய இடத்தில் ஒன்பது இன்னிங்ஸ் வெற்றிகளுடன் எம்எஸ் தோனி முன்னணி வகிக்கிறார்.

அடுத்த போட்டியில் விராட் கோலி இன்னிங்ஸ் வெற்றி பெற்றால் சமன் செய்து புதிய சாதனையை படைப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here