டெல்லியில் உள்ள கோட்லா மைதானத்தில் ஒரு பெவிலியன் ஒரு பகுதியை அணியின் இளம் கேப்டனான விராட் கோலீ பெயரை சூட்ட டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் சாதனை புரிந்த வீரர்களை கவுரவிக்கும் விதமாக, அவர்களின் சொந்த ஊரில் உள்ள மைதானங்களில் உள்ள ஒரு பெவிலியன் அவர்களின் ஓய்விற்கு பிறகு, அவர்களின் பெயரை சூட்டுவது வழக்கம்.

இந்நிலையில், இந்திய அணியின் இளம் கேப்டனான விராட் கோலியின் பெயரை சூட்ட முடிவு செய்தது, டெல்லி கிரிக்கெட் சங்கம். அதில் ஒரு சிறிய மாற்றம். ஏனெனில், விளையாடும் வீரரின் பெயரை பாவிலியனில் வைப்பது அரிது. அனால், அந்த வாய்ப்பு தற்பொழுது விராட் கோலிக்கு கிடைத்தது.

Image result for virat kohli

இதுகுறித்து டெல்லி மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் கூறும்போது, “சர்வதேச கிரிக்கெட் தொடரின் விராட் கோலியின் பங்களிப்பு பெருமை அளிக்கிறது. அவரின் சாதனைகளுக்காக அவரை கவுரவிப்பது பெருமை அளிக்கிறது”. என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here