வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கும் அரை சதங்களுக்கும் வெளியேறியபோது, மறுமுனையில் நிலைத்து ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டு, தனது சதத்தை பூர்த்தி செய்தார்.

அதன்பிறகு 150 ரன்கள் அடித்து விட்டு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை நோக்கி கைகளை உயர்த்தி காட்டினார் அகர்வால். அப்போது டிரஸ்ஸிங் ரூமில் இருந்து இரட்டை சதம் அடித்து விடு என கையை காட்டினார் விராட் கோலி.

மேலும் இரட்டை சதம் அடித்த பிறகு கையை காட்டிய  அகர்வாலிடம், முச்சதம் அடித்து விட்டு வா என விராட் கோலி கூறினார். ஆனால் துரதிஷ்டவசமாக 243 ரன்களுக்கு அகர்வால் ஆட்டமிழந்து வெளியேறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here