நேற்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்து 268 ரன்கள் குவித்தது. இதன் பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில்143 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்து 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி தனது 5வது வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 82 பந்தில் 72 ரன்கள் குவித்ததார். இதன் மூலம் விராட் கோலி தனது 20,000 ரன்களை எட்டினார். அதுமட்டுமின்றி இந்திய கேப்டன் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரைன் லாராவின் அதிவேக 20,000 சர்வதேச ரன்கள் சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளார். இவர் இந்த சாதனை மூலம் மூன்றாவது இந்திய வீரராக தற்போது திகழ்கிறார்.

https://twitter.com/BCCI/status/1144204039737040898?s=09

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here