இந்திய அணியின் முன்னாள் கேப்டனாகவும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டானாகவும், இந்திய அணியின் சிறந்த விக்கெட் கீப்பராகவும் வலம் வருபவர் தோனி. மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர்  கொண்டாடப்படும்  ஒரே வீரர் மகேந்திர சிங் தோனி.

பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான மகேந்திர சிங் தோனி 2000-ம் ஆண்டு வாக்கில் பீகார் அணிக்காக விளையாடினர்.அப்போது தோனியுடன் விளையாடிய வீரர் தான் சத்யபிரகாஷ் அவர்  தோனியின் அந்த காலத்தை பற்றி கூறியுள்ளார்.

அவர் கூறுகையில் “தோனியை நாங்கள் தீவிரவாதி என்று தான் அழைப்போம். தோனி வழக்கமாக 20 பந்தில் 50 ரன்கள் வரை அடிப்பார். ஆனால் நாட்டிற்காக விளையாடும் போது அவரின் அணுகுமுறை நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது.

மேலும் எப்போவது தான் கேப்டனாக இருப்பார். எப்போதும் ஹிந்தியில் தான் பேசுவார். ஆனால் தற்போது ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார்” என கூறினார்.

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக தோனி விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரியான காசி விசுவநாதன் தோனி கண்டிப்பாக இடம் பெறுவார் என கூறியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here