வெஸ்ட்இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கும் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அயர்லாந்தில் நடைபெற்று வருகிறது.

இந்த மூன்று அணிகளும் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். இறுதியில் முதல் இரண்டு இடத்தில் உள்ள அணிகள் இறுதிப்போட்டிக்கு செல்ல தகுதியை பெறும்.

இந்நிலையில் நடந்து முடிந்த 6 ஒருநாள் போட்டியில் முதல் இரண்டு இடத்தில் உள்ள வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் அணிகள் இன்று இறுதி போட்டியில் மோத உள்ளது. இந்த தொடரில் நடைபெற்ற லீக் போட்டியில் இரு அணிகளும் மோதிய 2 போட்டியிலும் வங்காளதேசம் அணி வெற்றி பெற்று உள்ளது.

ஆனால் ரன் ரேட் அடிப்படையில் வெஸ்ட்இண்டீஸ் முன்னிலையில் உள்ளது. மேலும் இரு அணிகளும் இதுவரை  36 முறை மோதி உள்ளது.அதில் வெஸ்ட்இண்டீஸ் 21 முறையும், 13 முறையும் வங்காள தேசம்  2 போட்டிகளில் முடிவு இல்லை .

அதே நேரத்தில் கடைசி5 போட்டிகளில் வங்காள தேசம் அணி வெற்றி பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் உலககோப்பை போட்டியில் கலந்து கொள்வதால் இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here