வெஸ்ட்இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கும் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அயர்லாந்தில் நடைபெற்று வந்தது. இப்போட்டியில் இறுதி போட்டிக்கு முதல் இரண்டு இடத்தில் உள்ள அணிகள் செல்ல தகுதியை பெறும்.

இந்நிலையில் நடந்து முடிந்த 6 ஒருநாள் போட்டியில் முதல் இரண்டு இடத்தில் உள்ள வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் அணிகள் நேற்று  இறுதி போட்டியில் மோதியது.

போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய அணி வெஸ்ட் இண்டீஸ்  24 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 152 ரன்கள் இருந்த போது மழை குறுக்கிட்டதால் பின்னர் 24 ஓவராக குறைக்கப்பட்டு டக் வொர்த் லீவிஸ் முறைப்படி வங்காளதேசம் அணிக்கு210 ரன்கள் இலக்காக வைத்தது.

பின்னர் களமிறங்கிய வங்காளதேசம் அணி 22.5 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 213 ரன்கள் குவித்து வெற்றி பெற்று முத்தரப்பு தொடரை கைப்பற்றியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here