இன்றைய உலகக்கோப்பை தொடரில் 34 லீக் போட்டியில் இந்திய அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி மோதுகிறது. இந்த போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தை நடைபெறவுள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் மூன்று மணி அளவில் தொடங்கவுள்ளது.

இந்த இரு அணிகளும் மொத்தம் 126 போட்டியில் சந்தித்துள்ளது. இதில் இந்திய அணி 59, வெஸட் இண்டீஸ் அணி 62 முறையும் வெற்றியை பெற்றுள்ளனர். உலகக்கோப்பையில் 8 முறை மோதிவுள்ளனர். இதில் இந்திய அணி 5 முறை வெஸ்ட் இண்டீஸ் அணி 3 முறையும் வெற்றியை பெற்றுள்ளனர். எனவே, இன்றைய போட்டியில் இந்திய அணிக்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here