வங்கதேச அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரையும் சமன் செய்தது.

இப்போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ருத்ரதாண்டவம் ஆடினார் 43 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் இது 6 சிக்ஸர்கள் அடங்கும்.

வங்கதேச அணியின் சுழற்பந்துவீச்சாளர் மோசடைக் ஹுசைன் வீசிய ஓவரில் அடுத்தடுத்து 3 சிக்சர்களை விளாசினார். நிச்சயம் இந்த ஓவரில் 6 சிக்ஸர்கள் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை.

இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு விளையாட்டாக சுழற்பந்து வீச்சாளர் சஹாலுக்கு ரோகித் சர்மா அளித்த பெட்டியில், நான் 6 சிக்ஸர்கள் அடிக்க பார்த்தேன். ஆனால் அது நடக்கவில்லை. நிச்சயம் அடுத்த போட்டியில் அதை முயற்சிக்கிறேன் என கலகலப்பாக பேட்டியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here