2019இன் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்ல் நடைபெறவுள்ளது. இப்போட்டியானது மே மாதம் 30ஆம் தேதியில் தொடங்க உள்ளது. மொத்தம் 46 லீக் ஆட்டத்தை கொண்ட இந்த தொடர், இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்க தேசம், ஆப்கானிஸ்தான், நியூஸிலாந்து என மொத்தம் 10அணிகள் மோதுகின்றது. இந்நிலையில் இப்போட்டிக்காண பரிசு தொகை வெளியானது.

பரிசு தொகையின் விபரங்கள்:

இறுதி போட்டிக்குள் நுழைந்து வெற்றி பெற்ற சாம்பியன்ஷிப் அணிக்கு 4 மில்லியன் டாலர் (அதாவது இந்திய மதிப்பில் 28கோடி7லட்சம்). தோல்வி அடைந்த அணிக்கு 2 மில்லியன் டாலர் (அதாவது இந்திய மதிப்பில் 14கோடி4லட்சம்).

அரை இறுதியில் தோல்வி அடையும் 2அணிகளுக்கும் தலா 80,000 டாலர் (இந்திய மதிப்பில் 5கோடி 61லட்சம்), ஒவ்வொரு லீக் ஆட்டத்தில் வெற்றி பெரும் அணிக்கு தலா 40,000 டாலரும்(இந்திய மதிப்பில் 28லட்சம்), அடுத்த சுற்றுக்கு முன்னேறும் 6அணிகளுக்கு தலா 100,000 டாலர்(இந்திய மதிப்பில் 70.20லட்சம்) பரிசாக வழங்கப்படும். ஆகமொத்தம் இந்த உலகக்கோப்பையின் பரிசு தொகையாக 10மில்லியன் டாலர் வழங்கப்படும் என ஐசிசி அறிவிப்பு.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here