2019 உலகக்கோப்பை தொடர் கடந்த மே 30ம் தேதி தொடங்கி கோலாகளமாக நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையில் லீக் சுற்றுகள் முடிவடைந்து தற்போது அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தியா, நீயூசீலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதியில் மோதி வருகிறது. தற்போது 45 லீக் மற்றும் 1 அரையிறுதி போட்டிகள் முடிவடைந்துள்ளது.

இந்திய அணி தனது 9 லீக் சுற்றில் 7 போட்டிகளில் வெற்றியை பெற்று புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. இந்திய அணி நியூசீலாந்து எதிரான லீக் போட்டி மழையால் ரத்து செய்ப்பட்டது. மற்றொரு போட்டியில் இங்கிலாந்து அணியுடன் தோல்வியை பெற்றது. இதையடுத்து அரையிறுதி முதல் போட்டியில் இந்தியா நியூசீலாந்தை எதிர்கொண்டு தோல்வி அடைந்து உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

இருப்பனும் இந்த உலகக்கோப்பையில் இந்திய விளையாடிய 9 போட்டிகளில் மொத்தம் 2516 ரன்கள் குவித்துள்ளனர். அதுமட்டுமின்றி மொத்தம் 77 விக்கெட்களை பெற்றுள்ளனர். இதில் ரோகித் சர்மா மட்டும் 648 ரன்கள் குவித்துள்ளார். இதன் பிறகு விராட் கோலி 453 ரன்கள் குவித்துள்ளார்.இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 10 மெய்டன் ஓவர்களை வீசியுள்ளார். 7 போட்டிகளில் ஜாஸ்பிரிட் பும்ரா 9 போட்டிகளில் 18 விக்கெட்களையும் பெற்றுள்ளார். இதையடுத்து முகமது ஷமி 4 போட்டிகளில் 14 விக்கெட்களை பெற்றுள்ளார்.

Bumrah

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here