தொண்ணூறுகளில் பிறந்தவர்கள் அனைவரும் ஜான் சீனாவைப் பார்த்தே வளர்ந்திருப்பார்கள். ’யூ காண்ட் சீ மி’ என ஜான் ஸீனா முகத்தின் முன் கைகளை விரித்து அசைக்கும் செய்கை பள்ளி மாணவர்கள் மத்தியில் மிக பிரபலம்.

அவருடைய எண்ட்ரன்ஸ் இசையை இன்றும் பல பேர் தங்கள் மொபைல் போன் ரிங்டோனாக வைத்துள்ளார்கள்.

ஜான் ஸீனாவின் சிறப்பம்சம் என்னவென்றால் எவ்வளவு அடி வாங்கினாலும் போட்டிகளில் இறுதியாக வென்றுவிடுவார். முதன் முதலில் குர்ட் ஆங்கிலுக்கு எதிரான போட்டியில் 2002-ஆம் ஆண்டு அறிமுகமானார் சீனா. 2005-ஆம் ஆண்டு நடந்த ரஸ்லிங்மேனியா21-ல் முதன் முதலாக ஜான் பிராட்ஷா லேய்ஃபீல்டை வென்று WWE சாம்பியன் பட்டம் வென்ற ஸீனாவுக்கு ஆண் ரசிகர்களை விடப் பெண் ரசிகர்கள் அதிகம்.

கடைசியாக 3 மாதங்களுக்கு முன் டிரிபுள் ஹெச்சுக்கு எதிராக நடந்த போட்டியோடு வேறு எந்த போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு, WWE-க்கு திரும்புவது குறித்து ஜான் சீனா பேசியுள்ளார்.

டிரான்ஸ்பார்மர்ஸ் திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் ‘பம்புள்பீ’ படத்தில் வில்லனாக நடிக்கும் ஜான் சீனா அத்திரைப்படத்தின் புரோமோஷனுக்காக நடந்த நிகழ்ச்சியில் இது பற்றி தெரிவித்தார்.

இந்த படத்தில் வில்லனாக நடித்திருப்பது போல், WWE-லும் நெகட்டிவ் ரோல் பிளேயராக வருவீர்களாக என்ற கேள்விக்கு “நான் திரைப்படத்தில் வேண்டுமானால் வில்லனாக நடிக்கலாம். WWE ரசிகர்களை பொறுத்தவரை நான் என்றும் அவர்களுக்கு ஹீரோதான். நான்WWE-க்கு திரும்பினாலும் அங்கே நெகட்டிவ் ரோல் உள்ள வீரராக நான் இருக்கமாட்டேன்” என்று ஸீனா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஸீனா WWEக்கு திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here