இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றது. இந்தப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்ரில் உள்ளரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 338 ரன்கள் குவித்தனர். மெகா இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்களை இழந்து 315 ரன்கள் பெற்றனர். இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றனர்.

இந்த போட்டியில் இரு அணிகளஅணிகளிலும் ஒருவர் சதம் அடித்துள்ளார்கள். இலங்கை அணியில் அவிஷ்கா பெர்னாண்டோ 103 பந்துகளில்  104 ரன்கள் குவித்துள்ளார். இவர் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இதன் பின் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நடுவரிசை ஆட்டக்காரர் பூரன் 103 பந்தில் 118 ரன்கள் குவித்தார். இதில் இவர் 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை விளாசியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here